வலை சமூகத்துக்கு வணக்கமுங்க ! என் பேரு கேசவன்.... மனசுல பட்டத பட்டுன்னு சொல்லிடறது என் பழக்கமுங்க ! அது என்னமோ தெரியல நான் சொல்றது எல்லாமே கேள்வியா போயிடுது அதனால என்ன எல்லாரும் கேள்வி கேசவன்னு கூப்பிட ஆரம்பிசிட்டாங்க..இனிமே நான் இங்க சில கேள்விகள கேட்க போறேன்..(நான் தருமி பரம்பரையாக்கும், எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும்..பதில் சொல்ல தெரியாது..) வலை சமூகத்துல நாலு எழுத்து படிச்சவங்களும் , நாட்டமைகளும் இருக்கீங்க..உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..இந்த வார கேள்விய ஆரம்பிக்கிறேன்
எதோ போபால் ன்னு ஒரு ஊருலே அமெரிக்க கம்பெனி ஒன்னு விஷ வாயுவே கசியவிட்டு ஒரு 15000 பேரு செத்து மடிஞ்சி இவ்வோளோ வருஷமாகி, அப்போ இருந்து விசாரனைய பண்ணி கோர்ட்லே கேஸ் நடந்து போன மாசம் ஒரு நாட்டமை தீர்ப்பு சொல்லி இருக்காரு...தீர்ப்பு சொன்ன நாட்டமைக்கு ஒரு கேள்வி
அய்யா நாட்டமை நீங்க எல்லாம் ரொம்ப படிச்சவங்க...ரொம்ப படிச்சா மனசாட்சி கூட மரத்து போயிடுமா? நீங்க சொன்ன தீர்ப்பு உங்களுக்கே நியாயமா படுதா?
இந்த கூத்த எல்லாம் வேடிக்கை பாத்து கிட்டு இருக்க அரசாங்க இயந்திரத்துக்கு ஒரு கேள்வி
அமெரிக்க லே ஒரு எண்ணெய் கம்பெனி கடல் லே எண்ணைய கொட்டினதுக்கு அடுத்த 2 வாரத்துக்குள்ள இந்த பிரச்சினைய National emergency level ல டீல் பண்ணி
அந்த கம்பெனி கிட்ட இருந்து ஒரு பெரிய தொகைய compensation ஆக வாங்கிட்டாங்க..இவ்வளவு தர்ம நியாயம் தெரிஞ்ச அந்த ஊரு கம்பெனி ஒன்னு தான் நம்ம ஊரு பிரச்சினைக்கு காரணமே..அவங்க கிட்ட நீங்க ஏன் பேசி ஒரு நல்ல தொகைய வாங்கி பாதிக்க பட்ட குடும்பத்துக்கு குடுக்கலாமே...ஏன் பண்ணலே பயமா இல்ல கையிலாகாத தனமா?
சொல்லுங்களேன் ப்ளீஸ்..
Sunday, July 4, 2010
Subscribe to:
Posts (Atom)