2 வாரம் முன்பு எனது 12 வயது மகனின் school graduation ceremony க்கு சென்று இருந்தேன். நடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக படித்த மாணவர்களுக்கு Outstanding Academic performance Award கொடுத்தார்கள். இதற்கு அடுத்த level,Excellent Academic Performance Award , Best Academic effort என்று வரிசையாக awards. இதில் முதல் category விருதுகளை வாங்கியதில் நிறைய மாணவர்கள் இந்திய மாணவர்களே ! பெருமை தான்..ஆனால் நான் ஒரு விஷயம் கவனித்தேன், இதை விட மிக சிறிய விருதுகளை வாங்கிய அமெரிக்க மாணவர்கள் எல்லாம் மிக கம்பீரமாக வந்து அதை பெற்று சென்றார்கள். ஆனால் மிகபெருமையான Outstanding Award விருது பெற்ற நம் மாணவர்கள் எல்லாரும் ஒரு தயக்கத்துடன் வந்து ஒருவித கூச்சம் (shy) சங்கோஜம் இதுடனேயே photo வுக்கு போஸ் கொடுத்தது எனக்கு மனசு கனத்தது.. ஏன் நமக்கு இந்த ஆளுமை குணம் வரவே இல்லை? நம்மை ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் அடிமை படுத்தியதாலா? இந்த ஆளுமை குணம் இல்லாததால் தான் நாம் எல்லாம் இருந்தும் பெரிய இடத்திற்கு போக முடியவில்லை. மாறட்டும் இந்த மன நிலை... மாற்றம் தானே மனித வாழ்வு !!
Monday, June 28, 2010
Friday, June 25, 2010
மஞ்ச பை
நீங்க ஒரு 30 வயதுக்கு மேல் உள்ளவர் எண்றால் கண்டிப்பாக உங்களுக்கு "மஞ்ச பை " தெரிந்து இருக்கும். எதாவது ஒரு ஜவுளி கடை பெயரோ அல்லது மளிகை கடை பெயரோ போட்டு மஞ்சள் கலரில் இருக்கும் துணிப்பை அது. அதைத்தான் முன்பு எல்லோரும் கடைக்கு எடுத்து செல்வார்கள். இப்போ எல்லாம் எல்லா த்து க்கும் "carry bag" தான். சமீபத்துல இங்க கலிபோர்னியா வில் சில பெரிய மளிகை கடைகளில் இனிமேல் "plastic carry bag" கிடையாதுன்னு சொல்லி அதை தருவது இல்லை. இனிமேல் பை எடுத்து செல்ல வேண்டும் அல்லது அங்கேயே துணிப்பை விற்கிறார்கள் வாங்கி கொள்ள வேண்டும் (விலை தான் சற்று அதிகம் $3). இந்த வகையில் 2 சவுகர்யம் அவர்களுக்கு, ஒன்று இனிமேல் plastic carry bag க்கு செலவு பண்ண வேண்டாம், இரண்டாவது plastic கழிவுகளில் இருந்து இந்த பூமி பந்தை காப்பாற்றுகிறார்கள்.
சமீபத்தில் என் சகதர்மினி ஒரு மளிகை கடைக்கு சென்றுவிட்டு இந்த துணிப்பை சகிதமாக வந்து இறங்கினார். அடுத்த நாள் அந்த பையை என்னிடம் தந்து இன்னொரு கடைக்கு போக சொன்னார்...என் நினைவு பின்னோக்கி சென்றது..
என்னுடைய 12 வயது வரை இந்த மஞ்ச பை என் வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகவே இருந்திருக்கிறது. எனக்கு school bag ஆகவும், கடைக்கு போய் மாளிகையோ, காய் கறி வாங்கவும், எங்காவது வெளியூர் போகும்போது "Luggage Bag / Cabin bag :) " ஆகவும் இருந்திருக்கிறது. எனக்கு 13 வயது ஆனா போது எனக்கு அந்த மஞ்ச பை தூக்குவது என்பது ஒரு கவுரவ பிரச்சினையாகிப்போனது. என்னிடம் என் குடும்பத்தினர் எவ்வளோவோ சண்டை போட்டும் இனிமேல் மஞ்ச பை தூக்குவது என்னால் முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன். என் பிடிவாதம் வென்றது..என் வீட்டில் இருந்து மெதுவாக மஞ்ச பை மறைந்து wire bag
வர ஆரம்பித்தது. அதன் பிறகு அந்த மஞ்ச பையோடு யாரையாவது பார்த்தால் அவர்கள் எல்லாம் நாகரிகம் இல்லாத மனிதர்கள் என்பவதாகவே என்னுள் பட்டது. அதன் பிறகு நான் மஞ்ச பை தூக்கவே இல்லை. மெதுவாக மஞ்ச பை மறைந்து plastic carry bag வந்ததில் அதை மறந்தே போனேன். ஆனால் காலம் ஒரு சிறந்த அளவுகோல், அது மறுபடியும் என்னை துணிப்பை தூக்க வைத்திருக்கிறது..

Tuesday, June 1, 2010
Long weekend ம் On call support ம்
இந்த Long weekend ல் On call support வந்துட்டதால எங்கயும் போகல. இந்த On call support ன்னா என்னான்னு தெரியாதவங்களுக்கு சொல்லிக்கிறேன்..அதாகப்பட்டது விடுமுறை நாள் லே office லே data load பண்றதுலையோ இல்ல business report லேயோ எதாவது பிரச்சினைன்னா அது ஈமெயில் லே யோ இல்ல cell phone லையோ தகவல் வரும் (நமக்கு தான் பிரச்சினை எந்த ரூபத்துல வேணாலும் வருமே) அத வீட்டுலேயே இருந்து சரி பண்ணி Business நல்ல படியா நடக்க support பண்றது. நீங்க தமிழ் சினிமா லெ எல்லாம் பாத்திருப்பிங்க ..ஊர் திருவிழாவுக்கு காப்பு கட்டிட்டா யாரும் ஊர விட்டு வெளிய போக கூடாதுன்னு , இதுவும் அதே மாதிரி தான். On call support ன்னா எங்கயும் வெளியூர் போகாம வீட்டுலே இருந்துகிட்டு ஈமெயில் check பண்ணிட்டே இருக்கணும்.
இந்த தடவ On call சப்போர்ட் லெ 2 advantage .
1 செலவு மிச்சம்
2 இந்த California traffic லெ 5 மணி நேரம் கார் ஓட்டல.
ஆமா நீங்க ?
இந்த தடவ On call சப்போர்ட் லெ 2 advantage .
1 செலவு மிச்சம்
2 இந்த California traffic லெ 5 மணி நேரம் கார் ஓட்டல.
ஆமா நீங்க ?
Subscribe to:
Posts (Atom)