Monday, June 28, 2010

ஆளுமை..

2 வாரம் முன்பு எனது 12 வயது மகனின் school graduation ceremony க்கு சென்று இருந்தேன். நடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக படித்த மாணவர்களுக்கு Outstanding Academic performance Award கொடுத்தார்கள். இதற்கு அடுத்த level,Excellent Academic Performance Award , Best Academic effort என்று வரிசையாக awards. இதில் முதல் category விருதுகளை வாங்கியதில் நிறைய மாணவர்கள் இந்திய மாணவர்களே ! பெருமை தான்..ஆனால் நான் ஒரு விஷயம் கவனித்தேன், இதை விட மிக சிறிய விருதுகளை வாங்கிய அமெரிக்க மாணவர்கள் எல்லாம் மிக கம்பீரமாக வந்து அதை பெற்று சென்றார்கள். ஆனால் மிகபெருமையான Outstanding Award விருது பெற்ற நம் மாணவர்கள் எல்லாரும் ஒரு தயக்கத்துடன் வந்து ஒருவித கூச்சம் (shy) சங்கோஜம் இதுடனேயே photo வுக்கு போஸ் கொடுத்தது எனக்கு மனசு கனத்தது.. ஏன் நமக்கு இந்த ஆளுமை குணம் வரவே இல்லை? நம்மை ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் அடிமை படுத்தியதாலா? இந்த ஆளுமை குணம் இல்லாததால் தான் நாம் எல்லாம் இருந்தும் பெரிய இடத்திற்கு போக முடியவில்லை. மாறட்டும் இந்த மன நிலை... மாற்றம் தானே மனித வாழ்வு !!

1 comment:

  1. என்னை பொறுத்தவரை இதற்கான முக்கிய காரணம் நம்முடைய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைதான்.
    மிக அதீதமான பாதுகாப்பு வளர்ப்பு, எல்லாவற்றிற்கும் ஆலோசனை சொல்வது, நம் மன வழி வாயிலாக பிள்ளைகளின் பிரச்சனைகளை அணுகுவது இதெல்லாம் நாம் செய்யும் தவறுகள்.
    ஆனால் நாம் நம் பிள்ளைகளின் நலன் கருத்தித்தான் இதை செய்கிறோம். இது தவிர அமெரிக்காவின் வரலாறு பற்றி சமீபத்தில் History சேனலில் ஒரு தொடரை பார்த்தேன். நாம எல்லாம் ஒரு விசா, நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வசதி இது எல்லாம் கட்டாயம் இருக்குன்னு உறுதியா தெரிந்த பின்தான் சென்னையில் விமானம் ஏறினோம். இப்படி வந்த நமக்கே இங்கு எத்தனை சவால்கள். வாழ்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமலே தைரியம் மட்டுமே துணையாகக்கொண்டு கப்பல் ஏறி இந்த நாட்டுக்கு வந்து வாழ்கையை அரம்பிச்சவர்களுக்கு தன்நம்பிக்கை எந்த அளவுக்கு இருந்திருக்கணும்? இப்போதிய தலைமுறை (இங்கு)மற்ற விஷயங்களை மறந்திருந்தாலும் இந்த ஆளுமையை இழக்கவில்லை. என்னதான் அண்ணன் அமெரிக்கான்னு நம்ம ஊர் பத்திரிக்கைகள் கிண்டல் பண்ணினாலும் அந்த நிலைக்கு வர அவர்கள் செய்த தியாகங்களும் உழைப்புகளும் கணக்கில் அடங்காதவை.

    லதா இளங்கோ

    ReplyDelete