ஒரு வழியா நானும் இந்த blog உலகத்துல இனஞ்சிட்டேன். ரொம்ப நாளைக்கு முன்னால என் நண்பன் குரு blog ஆரம்பிச்சப்போ இதெல்லாம் வெட்டி வேல ன்னு ரொம்ப அறிவு பூர்வமா யோசிச்சி நான் blog பக்கமே வராம இருந்தேன். சமீப காலமா நெறைய forward எல்லாம் blog லே இருந்து வரவே நானும் சுவாரஸ்யமா ஆயிட்டேன். அதே வேகத்துல blog ம் ஆரம்பிச்சிட்டேன்.
சரி, blog ஆரம்பிச்சிச்சாச்சு அடுத்து என்ன? எழுத வேண்டியது தான....
என்னடா build up எல்லாம் ரொம்ப பலமா இருக்கே இவன் பெரிய சிந்தனை சிற்பி யா இருப்பானோ இல்ல பாலகுமாரன் மாதிரி எழுதுவனோ ன்னு நெனசிடதீங்க.
நான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் ம் இல்ல, வரி வரி யா எழுதி வசியம் பண்ற வைரமுத்து ம் இல்ல. என்னடா இவன் இந்த சொதப்பு சொதப்பரானே இவெனெல்லாம் வெளங்குவானா ன்னு தான யோசிக்கிறிங்க? இதே சந்தேகம் தாங்க எனக்கும். சரி மேட்டருக்கு வருவோம். இந்த blog லே Mars லே தண்ணி இருக்கிறதையும், மேட்டூர் ல தண்ணி இல்லாததையும் பேசலாம். நிலவுல கால் வச்ச ஆம்ஸ்ட்ராங் பத்தியும் பேசலாம், சரக்கு அடிச்சிட்டு நிலத்துலையே நிக்க முடியாம சாயர சாமிகண்ணு பத்தியும் பேசலாம்.
(டேய்.....என்னடா சொல்ல வர???)
மொத்தத்துல வெட்டியா அரட்டை அடிக்கலாம்னு சொல்றேன்.
(அட சீ...இத சொல்லத்தான் இத்தன build up ஆ....ஏலே எடுரா அந்த அருவாள !!)
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment