Friday, May 21, 2010

வாழ்க்கை

என்க்கு ரொம்ப நாளாவே மனசுக்குள்ள ஒரு கேள்வி .அத்து இன்னான்னு கேட்டாக்கா...எல்லாரும் வாழ்க்கை வாழ்க்கை ன்னு பேசறாங்களே அப்படின்னா என்னான்னு...ரஜினி பாஷா லே படுவாரே 8 ...8 ஆ பிரிச்சிக்கோ ன்னு ..அந்த கணக்கு என்க்கு வெளங்கல...சரி நாம தான் கணக்குலே புலி யாச்சே..சரி கணக்க போட்டு பாப்போமே ன்னு ரொம்ப யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்தேன்..அதான் இது..கூட்டி கழிச்சி பாத்து சொல்லுங்க கணக்கு சரியான்னு... (இது கணக்கு தான்..ஆனா வாழ்க்கை ன்னா என்னா ன்னு புரியல)

வாழ்க்கைய நான் 3 ஆ பிரிக்கிறேன்
1 . பிறந்த திலிளிருந்து படிச்சி வேலைக்கு போற வரைக்கும்....இந்த வாழ்க்கை இருக்கே...இது ரொம்ப சுகமானது...சுருங்க சொன்னா.."எந்த வேலையும் செய்யாம அப்பன் காசுல உக்காந்து திங்கறது"..
2 . அடுத்தது 45 வயசு வரைக்கும் வாழர வாழ்க்கை. இதுலே
வேலைக்கெல்லாம் போயி சம்பாதிச்சி கல்யாணம் கட்டிக்கிட்டு, கொழந்த குட்டி எல்லாம் பெத்துகிட்டு ,இருக்கிற எல்லா bank லேயும் loan வாங்கி கார் வாங்கி, வீடு வாங்கி...மெதுவா பெரிய நோயின்(டயபடீஸ், BP இந்த மாதிரி ) ஆரம்பத்துல நின்னுகிட்டு.... சுருங்க சொன்னா..மொத்ததுல "கடன்காரனா ஆகறது"...

3. இந்த 3 வது 45 வயசிலிருந்து சாகர வரைக்கும்
(ரொம்ப கொடுமையா இருக்குமோ..)
இதுலே...பசங்கள படிக்க வச்சி...அதுகள ஏர்போர்ட் லே டா டா காட்டி America வோ இல்ல Australia வோ அனுப்பிட்டு..கெழவனும்..கெழவியும் நோயோட போராடிகிட்டு..எல்லா கடனையும் அடைச்சிட்டு...பசங்க நம்மள வந்து பாக்க இன்னும் எவ்வளோ நாள் இருக்குன்னு கணக்கு போட்டு பாத்துகிட்டு (இடையிலே America வோ இல்ல ஆஸ்திரேலியா வோ ஒரு ௬ மாச விசிட்)..காலையில படிச்ச நியூஸ் பேப்பர் யே திரும்ப திரும்ப படிச்சிகிட்டு..4 சுவரும் பெரிய மௌனத்துக்கும் நடுவுல வாழ்ந்துகிட்டு ...ஒரு பெரிய stroke ..இல்ல ஒரு பெரிய ஹார்ட் அட்டாக் வந்து ..hospital லே அட்மிட் ஆகி..பசங்க phone லே sorry நாங்க இப்போ வர முடியாத நெலமை..உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க ன்னு சொல்றத கேட்டு..வெளிய சொல்ல முடியாம புழுங்கி தவிச்சி...ஒரு நல்ல மௌனமான இரவில் அப்படியே மரணத்தை தழுவறது...
சுருங்க சொன்னா வாழ்க்கை ன்னா என்னான்னு புரிஞ்சிகிறது..

ஒரு வேளை எனக்கும் வாழ்க்கை ன்னா என்னன்றது இந்த 3 category வரும்போது தான் புரியோமோ?

No comments:

Post a Comment